கடுகு – சினிமா விமர்சனம்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமமான தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருந்து வருகிறார் நாயகன் பரத். இவர் அந்த கிராமத்தில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர். இதனால், அந்த ஊரில் இவருக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. இந்நிலையில், அதேஊருக்கு மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டரான வெங்கடேஷ், கூடவே தனக்கு சமையல்காரராக ராஜகுமாரானையும் அழைத்து வருகிறார். வந்த இடத்தில் டீச்சரான ராதிகா பிரசித்தாவுக்கும், ராஜகுமாரனுக்கும் நட்பு உருவாகிறது. ராதிகா பிரசித்தா உடன் இருக்கும் சிறுமியிடம் ராஜகுமாரன் ரொம்பவும் அன்புடன் இருக்கிறார். இச்சமையத்தில், அந்த தொகுதிக்கு அமைச்சர் ஒருவர் வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் பரத். அடுத்ததாக அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவிக்கு அந்த அமைச்சர்தான் பரத்தை பரிந்துரைக்கிறார்.

ஊருக்கு வரும் அமைச்சர் பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது பள்ளி மாணவியான கீரித்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் பரத், அவரால்தான் தனக்கு எம்.எல்.ஏ.பதவி கிடைக்கவிருக்கிறது என்பதால் அதை கண்டும் காணாததுமாக சென்றுவிடுகிறார். ஆனால், பிரசித்தாவோ அமைச்சரிடமிருந்து அந்த மாணவியை காப்பாற்றுகிறாள். இந்த விஷயம் பிரசித்தா மூலமாக ராஜகுமாரனுக்கு தெரிய வருகிறது. எந்தவிதத்திலும் அந்த பெண்ணுக்கு நீதி தேடிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் ராஜகுமாரன் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு அந்த அமைச்சரை எப்படி தண்டித்தார்? இதில் ராதிகா பிரசித்தா, பரத்தின் பங்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

 பரத் படம் முழுக்க மிடுக்கான தோற்றத்துடன் அழகாக வலம் வந்திருக்கிறார். இளம் அரசியல்வாதி போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ராஜகுமாரனின் நடிப்பு படத்திற்கு பலமாக உள்ளது. ராதிகா பிரசித்தா தனது சொந்த கதையை சொல்லி அழும் காட்சிகளில் எல்லாம் இரக்கம் வருகிறது. பள்ளி மாணவியாக வரும் கீர்த்தி, கீர்த்திக்கு அம்மாவாக நடித்தவர், போலீஸ் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷ், அமைச்சராக வரும் தயா வெங்கட் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்