வைகை எக்ஸ்பிரஸ் – சினிமா விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா. மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் குத்துயிரும் கொலையிருமாக கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.வை நியமிக்கிறார் எம்.பி.சுமன்.

அதே பெட்டியில் பயணம் செய்யும் தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்ததும், அந்த கூபேயில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் ஆர்.கே. இந்த கொலைக்கான விசாரணையை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த குற்றவாளி யார்? அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? என்பதை எதிர்பாராத கிளைமாக்சுடன் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

ஆர்.கே. துணிச்சலான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளில் இவருடைய ஆக் ஷன் அதிர வைக்கிறது. இரட்டை வேடங்களில் வரும் நீது சந்திரா, தனது வித்தியாசமான நடிப்பால் இரண்டையும் வேறுபடுத்தி காட்டியுள்ளார்.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்