இந்தியாவில் 101 கோடிஸ்வரர்கள், பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்

உலகளவில் இந்தியா தான் நான்காவது அதிகக் கோடிஸ்வரர்களைக் கொண்ட நாடு ஆகும். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி அதில் முதல் இடம் பிடித்துள்ளார்.

உலகப் பில்லியனர்களில் 2017ஆம் ஆண்டு 2,043பேர் உள்ளதாகவும் அவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 7.67 டிரில்லியன் டாலர்கள் என்றும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் செல்வ மதிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பில் கேட்ஸ்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாகப் பில்கேட்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் 18 முறை பில்கேட்ஸ்தான் முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு 75 பில்லியன் டாலர்களாக இருந்த பில் கேட்ஸின் சொத்துமதிப்பு இந்த ஆண்டு 86 பில்லியன் டாலராக உள்ளது. பில்கேட்ஸை தொடர்ந்து பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனர் வாரன் பஃபேட் 75.6 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமேசான்

அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் 27.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இந்த அண்டு சேர்த்து 72.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

டிர்மப்

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிர்மப் 3.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 544 வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் மொத்தம் 101 பில்லியனர்கள் உள்ளதாகவும் அதில் 100 பேர் பெறும் பணக்காரர்கள் என்றும் அந்தப் பட்டியல் கூறுகின்றது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் 565 பில்லியனர்கள் உள்ளதாகவும், சென்ற ஆண்டு 540 நபராக இந்தப் பட்டியல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்த இடத்தில் சீனா 319 நபர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜெர்மெனி 114 பேருடன் மூன்றாம் இடத்திலும், இந்தியா 101 நபர்களுடன் 4 வது இடத்திலும் உள்ளது.

இந்திய வம்சாவளி பில்லியனர்கள் இந்திய வம்சாவளிகளில் 20 பேர் பிற நாடுகளில் பில்லியனர்களாக உள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிந்துஜா பிரதர்ஸ் 15.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 64 வது இடத்திலும், இந்தியாவில் பிறந்த பல்லோஞ்சி மிஸ்த்ரி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுவின் தலைவர் ஆவர் இவர் 14.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 77 வது இடத்தில் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான இண்டோராமா இணை நிறுவனர் ஸ்ரீ பிரகாஷ் லோஹியா 5.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 288 வது இடத்திலும் உள்ளார்.

சைரஸ் மிஸ்டரி

மிஸ்திரியின் இளைய மகன் சைரஸ் மிஸ்டரி டாடா குழுமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து அந்தப் பில்லியனர்கள் பட்டியலிலிருந்தும் வெளியேறியுள்ளார். 2012ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி

59 வயது உடைய முகேஷ் அம்பானி 23.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் 33 வது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனத்தை நிர்வகித்து வரும் முகேஷ் அம்பானி இந்திய தொலைத்தொடர்பு துறையில் சென்ற ஆண்டு நுழைந்தது முதல் 4ஜி ஸ்மார்ட்போன் சேவையை இலவசமாக அளித்துப் பெறும் புரட்சியே ஏற்படுத்தி உள்ளார் என்றும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அணில் அம்பானி

முகேஷ் அம்பானியின் தம்பி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அணில் அம்பானி 2.7 பில்ல்லியன் சொத்து மதிப்புடன் 745 வது இடத்தில் உள்ளார். மேலும் இவருடைய ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இந்த இணைவது குறிப்பிடத்தக்கது.

லக்‌ஷ்மி மிட்டல்

இந்தியர்களில் அடுத்து ஆர்சிலெர்மிட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான லக்‌ஷ்மி மிட்டல் 16.4 பில்லியன் சொத்துமதிப்புடன் 56 வது இடத்தில் உள்ளார்.

 

இந்தியாவில் இருந்து பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிறர் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜிம் ப்ரேம்ஜி 72 வது இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் 250 வது இடத்திலும், பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் 544 வது இடத்திலும், முதலீட்டாளர் ராகேஷ் 939 வது இடத்திலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி 1161 வது இடத்திலும், டாபர் நிறுவன தலைவர் விவேக் சண்ட் பர்மன் 1290 வது இடத்திலும், இஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி 1290 வது இடத்திலும், வொக்கார்டி நிறுவன தலைவர் ஹாபில் கோக்ராகி வாலா 1567 வது இடத்திலும், மகேந்திரா குழுமத்தின் மூத்த தலைவர் ஆனந்த் மகேந்திரா 1567 வது இடத்திலும், பிராப்ரட்டி டைகூன் நிறுவனத்தின் தலிவர் நிரஞ்சன் 1678 வதுஇடத்திலும், எஸ் வங்கி தலைவர் ரானா கபூர் 1795 வது இடத்திலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பேடிஎம் மொபைல் வாலெட் பேடிஎம் நிறுவனரான விஜய் ஷேகர் ஷர்மா 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 1567 வது இடத்தில் உள்ளார்.  பதஞ்சலி பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாபா ராம்தேவின் நண்பருமான ஆச்சர்யா பாலகிருஷ்னா இந்தப்பட்டியலில் முதன் முறையாக 814 வது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும்.

மார் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் நிறுவனர் மார் ஜூக்கர்பெர்க் முதல் முறியாக 11.4 பில்லியன்சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் டாப் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார். அதிகமான புதிய பில்லியனர்கள் இணைந்துள்ள நாடுகள் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனாவில் இருந்து 76 நபர்களும், அமெரிக்காவில் இருந்து 25 நபர்களும் போர்ப்ஸின் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதே நேரம் பட்டியலில் இருந்து சீனாவை சேர்ந்த 33 நபர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த 7 நபர்களும் வெளியேறியுள்ளனர்.