தமிழ் படங்களிலும் நஸ்ரியா நடிக்க வேண்டும்

 

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா நசிம். தமிழ் திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக நீண்ட காலம் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். மேலும், அத்தோடு நடிப்புக்கும் முழுக்கு போட்டுவிட்டார். இதனால், நஸ்ரியாவின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் நஸ்ரியாவின் கணவர் ஃபகத், புதிய செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். விரைவில் மலையாள படம் ஒன்றில் நஸ்ரியா நடிக்க இருக்கிறார் என்பதே அந்த சந்தோஷமான செய்தி ஆகும். தற்போது, இந்த செய்தியால் நஸ்ரியாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்படியே தமிழ் படங்களிலும் நஸ்ரியா நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.