பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார் நயன்தாரா

ஓவியா இல்லாமல் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.  மேலும் பல பிரபலங்களையும் தொடர்பு கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு சிவகார்த்திகேயனோடு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அவர் வர சம்மதம் தந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேலைக்காரன் படத்தை விளம்பரபடுத்த உள்ளார். இதற்காக நயன்தாராவும் வர உள்ளார். இருவரும் சேர்ந்து ஒரு நாள் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளனர். அங்கிருந்தபடியே வேலைக்காரன் படம் குறித்த புரமோவும் நடைபெற உள்ளது.