அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (24.7.2017) காலை, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், கழகப் பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்பொழுது, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
மேலும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் டீசூழுஊ திட்டம் ஆகியவற்றால் மக்களுக்கு எற்படும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார். அந்த பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் இரா.விசுவநாதன், டாக்டர் வா.மைத்ரேயன்,எம்,பி., முன்னாள் அமைச்சர் செ.செம்மலை,எம்,எல்,ஏ, பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆகியோர் உடனிருந்தார்கள். மேலும், கழகப் பொருளாளரும், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுடன், கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்தார்கள்.