‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ காயத்ரி கவுதம் மேனன் படத்தில் ஒப்பந்தம்

விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து அவர் நடித்துள்ள ‘புரியாத புதிர்’ திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், காயத்ரி ‘உலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் கவுதம்மேனன் தயாரிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஷ்ணு விஷால் – தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் அவர்களுடன் காயத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்த படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்.