நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம்

பூர்வா புரொடக்ஷன்ஸ் பிரதீப் குமார் தயாரிப்பில், பிரசாந்த் ராமர் இயக்கத்தில், செந்தூர் பாண்டியன், பிரீத்திகரன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

நாயகன் செந்தூர் பாண்டியன் படித்துவிட்டு வேலைக்கு போகாமல், காதல் என்ற பெயரில் (காதல் இல்லை) செல்போனில் பெண்களிடம் சாட் செய்து, திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று சில பல தகாத வேலைகள் செய்வது என்று ஊர் சுற்றி வருகிறார். 

இந்த சமயத்தில் ஃபேஸ்புக் மூலம் நட்பாகிய ப்ரீத்தி கரணை அவரன் பிறந்தநாளில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து செந்துர் பாண்டியன், மற்ற பெண்களைப் போலவே அவரையும் தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு அவரின் ஊரான மாயவரம் செல்கிறார்.

ப்ரீத்தி கரனை பார்த்த செந்தூர் பாண்டியன், தியேட்டர்க்கு அவரை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் அவரோ திரையரங்கம் வேண்டாம், பூம்புகார் போகலாம் என்று சொல்லி, இருவரும் மாயவரத்தில் இருந்து பூம்புகார் போகிறார்கள். 

பூம்புகார் போனதும் நாயகன் சேர்ந்து பாண்டியனின் அந்த எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? நாயகி பிரித்தி கரன் பூம்புகார் போகலாம் என்று சொன்னதற்கான காரணம் என்ன என்பதை ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தோட மீதி கதை.