கார்டியன் விமர்சனம்

ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில், விஜய் சந்தர் தயாரிப்பில், குருசரவணன்  மற்றும் சபரி இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி,பிரதீப் ராயன்சுரேஷ்  மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக்  வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா(அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்) ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கார்டியன்.

ஹன்சிகா தன்னுடைய சிறு வயதில் இருந்தே எதை ஆசைப்பட்டாலும் கிடைக்காது எதை செய்ய முயற்சி செய்தாலும் அது தவறாக போய் முடியும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக இருக்கிறார்.

அப்படி இருக்கும் ஹன்சிகாவின் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்கிறது கிடைக்காது என்று நினைத்த வேலை அவருக்கு கிடைக்கிறது, மட்டுமில்லாமல் அவர் என்ன நினைக்கிறாரோ அவை அனைத்துமே நடந்து விடுகிறது இது நல்ல விஷயமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது தீமையாக இருந்து வருகிறது.

இது எந்த அளவுக்கு சீரியஸ் ஆக இருக்கிறது என்றால் ஒருவரை பார்த்து நீ இறந்து விடுவாய் என்று சொன்னால் அவன் இறந்து விடுகிறான். 

இப்படியான ஒரு விபரீதமான சக்தி தனக்கு வந்திருப்பதை உணரும் ஹன்சிகா வருத்தம் அடைகிறார்.

ஒரு சூழ்நிலையில் இந்த சக்திக்கான காரணம் ஒரு அமானுஷ்யம் தன்னை பின்தொடர்வது தான் என்பதை தெரிந்து கொள்கிறார் அந்த அமானுஷ்யம் தன்னுடைய வாழ்வில் வர காரணம் என்ன எதற்காக அந்த அமானுஷ்யம் தன் வாழ்வில் வந்தது யாரை பழிவாங்கத் தெரிகிறது அந்த அமானுஷ்யம் யார் என்பதே கார்டியன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : ஃபிலிம் ஒர்க்ஸ்

தயாரிப்பாளர் : விஜய் சந்தர்

இயக்குனர்கள் : குருசரவணன்  மற்றும் சபரி

கதை,திரைக்கதை மற்றும் வசனங்கள் : குருசரவணன்

இசையமைப்பாளர் : சாம் C.S

ஒளிப்பதிவாளர் : K.A சக்திவேல்

படத்தொகுப்பாளர் : M.தியாகராஜன்

கலை இயக்குனர் : ‘லால்குடி’ N.இளையராஜா

சண்டைப் பயிற்சி இயக்குனர் : ‘ டான்’அசோக்

நடன இயக்குனர் : விஜி சதிஷ், அஸார், தஸ்தா, ஸ்ரீகேஷ்

பாடலாசிரியர்கள் : விவேகா, சாம் C.S , உமாதேவி

ஆடை வடிவமைப்பாளர் : அர்ச்சா  மேத்தா

ஆடைகள் : P.ரங்கசாமி

இசை மேற்பார்வையாளர் : புவனா ஆனந்த்

ஒலி வடிவமைப்பு மற்றும்  ஒலிக்கலவை : அருண் சீனு , T.உதயகுமார்

படங்கள் : மோதிலால்

விளம்பர வடிவமைப்பாளர் : ஜோசஃப் ஜாக்சன்

தயாரிப்பு மேலாளர் : S.கிருஷ்ணமூர்த்தி

நிர்வாக தயாரிப்பாளர் : நவீன்  பிரபாகர்

படைப்பு தயாரிப்பாளர்கள் : விஜய்  பிரதீப், ஸ்டாலின்

மக்கள் தொடர்பு : ரியாஸ்.K.அஹ்மத்,  யுவராஜ்