ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

 

தினகரன், இனி முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தார். பின்னர், ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கேட்டு அறிந்த தினகரன், சசிகலாவை சந்திப்பதற்காக இன்று காலை பெங்களுரு புறப்பட்டு சென்றார். அப்போது அதிமுக நிலவரம் சரியில்லை என்று கூறியவர், சசிகலாவின் ஆலோசனை படி கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். அதனால், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் இடையேயும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில், நிதியமைச்சர் ஜெயக்குமார் தனது அறையில் 17 அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அந்த கூட்டத்தில், தங்கமணி, சி.வி.சண்முகம், சரோஜா, திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், கடம்பூர் ராஜூ, நடராஜன், செங்கோட்டையன், ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தினகரன் பெங்களூரு சென்றுள்ள நிலையில், அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.