தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அ.தி.மு.க.வில் இருந்து நான் ஒதுங்கவில்லை. என்னை யாரும் நீக்க முடியாது என்கிறார் தினகரன். ஆனால் தினகரனோடு தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லுகிறார்.
கட்சியில் நிலவும் குழப்பம் ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. இப்படி கட்சியையும், ஆட்சியையும் குழப்பிக் கொண்டிருந்தால் நிர்வாகம் எப்படி நடக்கும்? தெளிவான முடிவெடுக்காமல் நிலை தடுமாறும் பட்சத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
இந்நிலையில் நடு இரவு ‘பிரேக்கிங் நியூஸ்’ என்றில்லாமல் தடையில்லாமல் ஆட்சியை தொடர வேண்டும் என்று தமிழிசை இன்று கூறிருந்த நிலையில் டி.டி.வி.தினகரனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்த நிலையில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பதும் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.