125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ‘மஹாகாளி’ – இறுதிக்கட்டத்தை எட்டிய ஹனு-மேன் யுனிவர்ஸ்

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் (PVCU) அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘மஹாகாளி’ திரைப்படம் 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

RKD Studios தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பூஜா அபர்ணா கொல்லுரு இயக்க, பிரசாந்த் வர்மா கிரியேட்டராக செயல்படுகிறார். IMAX வடிவத்திற்காக உருவாகி வரும் இப்படம் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் தயாராகி வருகிறது.

நடிகர் ரோஹித் சராஃப் தனது படப்பிடிப்பு பகுதிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளார். மேலும், சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா ஏற்கனவே தனது காட்சிகளை முடித்துள்ளார். பூமி ஷெட்டி மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளன.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து: பிரசாந்த் வர்மா

இயக்கம்: பூஜா அபர்ணா கொல்லுரு

தயாரிப்பு: RKD Studios (RK துக்கல், ரிவாஸ் ரமேஷ் துக்கல்)

இசை: ஸ்மரண் சாய்

ஒளிப்பதிவு: சுரேஷ் ரகுது

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்ரீ நாகேந்திர தங்காலா

மக்கள் தொடர்பு : யுவராஜ்