சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது, ஜனவரி 2017 வாக்காளர் இறுதிப்பட்டியலின்படி வார்டுகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
ஆகையால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி ஜூலை இறுதிக்கு பிறகே முடிவெடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் இன்னும் முடியவில்லை. இடஒதுக்கீடு தொடர்பான 1700 புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்குகளை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.