சீனாவில் உருவாக்கப்பட்டு வருகிறது, உலகின் முதல் வனநகரம்

அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலில் இருக்கும் சீனா நாட்டில் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனையும், காற்றில் உள்ள மாசுகளை தவிர்க்கும் விதத்தில் தெற்கு லியுஸோ பகுதியில் உலகின் முதல் வனநகரம் ஒன்றினை உருவாக்கி வருகின்றனர். அது என்ன வனநகரம் என்று கேட்கலாம் வேறொன்றும் இல்லை வனத்தை அழித்து நகரத்தை உருவாக்கினோம் இப்போது நகரத்திலே வனத்தை உருவாக்குவதுதான் வனநகரமாகும்.

லியுஸோ நகரத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் முகப்பு பக்கங்களிலும் மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்துள்ளனர். இந்த நகரில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் மரங்கள், செடிகளால் நிறைந்துள்ளது. கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்கள் ஆண்டுதோறும் சுமார் 10,000 டன் கார்பன் டை ஆக்சைட் வாயுவை உறிஞ்சி 900 டன்கள் ஆக்ஸிஜன் வாயுவை உருவாக்குமாம்.

மொத்தமாக சேர்த்து இந்த நகரில் 40,000 மரங்கள் உள்ளன. மேலும் 100 வகைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் செடிகள் கட்டடங்களில் நடப்பட உள்ளது. இதனால் நகரத்தில் ஏற்படும் காற்று மாசுபாடு குறைக்கப்படும் என்கின்றனர் சுற்றுசூழல் ஆய்வாளர்கள்.