கோவில்பட்டியில் பிச்சையெடுத்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Azhagendra Solluku Amudha

2015 -2016, 2016-2017 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்ட பின்பு இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படமால் இருப்பதை கண்டித்தும், உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க கோரியும், அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டபின்பு அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி  கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பூச்சி மருந்து பாட்டில்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசுவாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாலையில் விவசாயிகள் நின்று கொண்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முட்டிகால் போட்டும், தரையில் படுத்தவாறு பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஓப்பாரி வைத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.