பள்ளி பாடமாகிறது காமராஜரின் வாழ்க்கை வரலாறு

தமிழக சட்டப்பேரவையில் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழக்கை வரலாற்றினை பள்ளி பாடப்புத்தகத்தில் பாடமாக மாணவர்கள் படித்து தெரிந்துகொள்ளும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்தும். சிறந்த பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் காமராஜரின் பெயரில் விருது வழங்கப்படுவது குறித்தும் முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.