தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் 2018 என்ற பெயரில், தேசிய பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக 621 பில்லியன் டாலர்கள் அளவுக்கு செலவழிக்க அனுமதி வழங்கும் இந்த மசோதாவில், இந்தியா தொடர்பாக எம்.பி. அமி பேரா ((Ami Bera)) முன்மொழிந்த திருத்தமும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதன்படி, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் கலந்தாலோசித்து, இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, அமெரிக்க அதிபரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக நடைமுறைக்கு வரும்.