கருப்பு விமர்சனம்

ஆர் ஜி பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா, அனகா மாயரவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கருப்பு.

கேரளாவில் இருந்து தன்னுடைய மகள் ஆப்ரேஷனுக்காக சென்னைக்கு வருகிறார் இந்திரன்ஸ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக அதற்கு முன்னதாக இருக்கும் பேஷன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இறங்குகிறார்கள்.

அங்கு அவர்களிடம் இருந்த நகை பையை திருடர்கள் கொள்ளையடித்து விட்டு சென்று விடுகின்றனர். காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார்கள். காவல்துறை அதனை கண்டுபிடித்து ஒப்படைக்கும் பொழுது அதில் 15 பவுன் இல்லை என்றும் அதனை திருடர்களை எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர் போலீஸ்.

காவல்துறையினரோ கிடைத்த நகையை இந்திரன்ஸ் கையில் கொடுக்காமல் நீதிமன்றத்தில் போய் தான் வாங்க வேண்டும் என்று சொல்கின்றனர். 

அதற்காக மாறன் ஒரு ஒரு வக்கீல் உடைய நம்பரை கொடுத்து அவரிடம் செல்லுமாறு சொல்கிறார். நீதிமன்றத்திற்கு சென்ற இந்திரன்ஸ் வக்கீலான ஆர் ஜே பாலாஜியை சந்திக்கிறார்.

நீதிமன்றத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வக்கீல் ஆர் ஜே பாலாஜி. ஆர் ஜே பாலாஜி எந்த வழக்கை எடுத்து வாதாடினாலும் நீதிபதிக்கு தேவையானவற்றை கொடுத்து தனக்கு தகுந்தவாறு தீர்ப்பை வாங்கி விடுவார். 

அவரை மீறி வேறு யாராவது அங்கு செயல்பட்டால் அவர்களை குண்டர்களை வைத்து மிரட்டி வழிக்கு கொண்டு வந்து விடுவார்.

அப்படிப்பட்ட ஆர் ஜே பாலாஜியிடம் தான் இந்திரன் தன்னுடைய வழக்கை கொண்டு செல்கிறார். நகையில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்று நினைத்து வழக்கை காலதாமதம் ஏற்படுத்தி நடத்துகிறார். 

நான்கு மாதங்களாக நகையை மீட்டு தராமல் இழுத்துக் கொண்டு இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. இந்திரன் பொறுமை இழந்து தன்னுடைய நகை கிடைக்கவில்லை என்ற கோபத்திலும் வெறுப்பிலும் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கருப்பு கோவிலுக்கு சென்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி மிளகாய் அரைத்து அந்த கருப்பசாமிக்கு பூசுகிறார்.

அந்த நேரத்தில் இந்திரன்ஸின் கண்ணீரை துடைப்பதற்காக வருகிறார் கருப்பசாமி சூர்யா உருவத்தில். சூர்யாவிற்கும் ஆர் ஜே பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. 

இந்திரன்ஸ் வழக்கை கருப்பனாக வந்த சூர்யா முடித்து கொடுத்தாரா? இல்லையா? ஆர்.ஜே பாலாஜியை என்ன செய்தார்? என்பதே படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 

இயக்கம் : ஆர் ஜே பாலாஜி 

ஒளிப்பதிவு : ஜி கே விஷ்ணு 

எடிட்டிங் : கலைவாணன் 

இசை : சாய் அபயங்கர் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (S2 Media)