ஏ சற்குணம் இயக்கத்தில், துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், நரேன் மணி, வசுந்தரா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இணைய தொடர் எக்ஸாம்.
அதிதி பாலன் போலீஸ் உயரதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு ஊரில் இருந்து வேறொரு மலை கிராமத்திற்கு பணிமாறுதல் ஏற்பட்டு செல்கிறார். தன்னுடைய ஐந்து வயது மகளையும் தன் அம்மாவையும் அதே ஊரில் விட்டுவிட்டு இவர் மட்டும் வேறு ஊருக்கு செல்கிறார்.
அப்படி செல்லும் வழியில் அதிதி பாலன் காரில் துஷாரா விஜயன் மறைமுகமாக ஏறி அதிதியை கடத்தி சென்று விடுகிறார். அதிதியை தன்னுடைய வீட்டில் ஒரு தனி அறையில் கட்டி போட்டு விட்டு அதிதியின் காவல் உடையில் தான்தான் புதிய அதிகாரி என்று கூறி தன்னுடைய பணியை அங்கு தொடங்குகிறார்.
துஷாவிற்கு அப்பாஸ் உதவி செய்கிறார். அந்த மலைக் கிராமத்தில் உள்ள கோச்சிங் சென்டர்களுக்கு சென்று விசாரணையை தொடங்குகிறார் துஷாரா.
அங்கு அரசாங்க பணிக்கான நுழைவுத் தேர்வு பல வித மோசடிகள் நடப்பதை கண்டுபிடித்து அதனை ஒழிக்க திட்டமிடுகிறார்.
துஷாரா எதற்கு அதிதியை கடத்தினார்? எதற்காக அதிதி பெயரில் காவல்துறையில் சேர்ந்தார்? நுழைவு தேர்வு மோசடிக்கும் துஷராவுக்கும் என்ன சம்பந்தம்? அப்பாஸ் எதற்காக உதவி செய்கிறார்? என்ற பல கேள்விகளுக்கான விடையே எக்ஸாம் இணையதொடரோட மீதிக்கதை.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : ஏ சற்குணம் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் : புஷ்கர் &காயத்ரி
தயாரிப்பாளர்கள் : கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்பிரியா, எஸ் நந்தகுமார்
ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்
இசை : சாம் சி.எஸ்
எடிட்டிங் : ரிச்சர்ட் கெவின்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

