தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்பு திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டபேரவைக்கு திமுக தலைவர் கருணாநிதி வர விலக்கு அளிக்கும் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமானது ஆளும் கட்சி ஆதரவோடு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் ஆறுமாதத்திற்குள் பேரவையில் உள்ள வருகை குறிப்பேட்டில் கையெழுத்து இடவில்லை என்றால் அவரது எம்.எல்.ஏ.,பதவி பறிபோகும் என்ற விதிமுறை உள்ளது. ஒருவேளை வரமுடியாத சூழல் பேரவை உறுப்பினருக்கு ஏற்பட்டால் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.