அம்ருதா என்ற பெண், ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரி தொடரந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அடுத்த வாரம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், இதுவரை ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் விளையக்கூடாது என்பதால் அமைதியாக இருந்ததாகவும், அவரது வளர்ப்பு தந்தை மரணத்தால் தற்போது இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாகவும் அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கை வைஷ்ணவ பிராமண முறைப்படி செய்ய வேண்டும் என்று அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்த விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இது குறித்து விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கினை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு சசிகலா தரப்பில் இருந்து மிரட்டல் வருவதாக அம்ருதா கூறியிருப்பது புது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.