இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம் (IISM-SparrcTrust)

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து – திருக்குறள்

பொருள்: நோயில்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு.

வள்ளுவர் கூறியது போல நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த ஐந்தில் முதலாவது நோய் இல்லாது இருப்பது. நோய் இல்லாது இருக்க  உடற்பயிற்சி, விளையாட்டு இரண்டும் முக்கியமானது. 

விளையாட்டு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த நிபுணராக திகழ்ந்து வருகிறார் டாக்டர் திரு. கண்ணன் புகழேந்தி MBBS., MSM அவர்கள். டாக்டர் கண்ணன் புகழேந்தி தலைமையில், நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் Sparrc Institute 13 ஆண்டுகளாக  14 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது.

இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்தியாவில் நோய் பெரும் பிணியாக இருக்கிறது. நோயை விரட்டவும், நோய் வராமல் தடுக்கவும் வாழ்வியல் மாற்றம் அவசியம். அதன் முக்கியத்துவத்தை  மாணவர்களிடம் முதலில் ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறார் டாக்டர் கண்ணன் புகழேந்தி. விளையாட்டு மருத்துவ நிபுணரான டாக்டர்  திரு. கண்ணன் புகழேந்தி, மாணவர்கள் மூலமாக எதிர்கால வாழ்க்கையை நோயற்றதாக மாற்றும் முன்முயற்சியை  எடுத்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக மருந்துகளின்றி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் கல்வியை பயிற்றுவிக்கும் கல்லூரியை 2017-அக்டோபர் முதல் தொடங்கி டாக்டர் கண்ணன் புகழேந்தி நடத்தி வருகிறார்.

இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம் – Indian Institute of Sports Medicine (IISM – Sparrc Trust) என்ற பெயரில் லாப நோக்கமற்ற கல்வி நிறுவனத்தை (தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சென்னை அண்ணா நகரில் துவக்கி உள்ளார் டாக்டர் திரு கண்ணன் புகழேந்தி.

கல்லூரியின் நிறுவனர் மற்றும்  இயக்குனர் திரு. கண்ணன் புகழேந்தி , மேலாண்மை இயக்குநர் திருமதி சுஜாதா புகழேந்தி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம் செயல்படத் தொடங்கியுள்ளது. தரமான கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி, செயல்திறன் அதிகரிப்பு, நோயிலிருந்து மீட்பு, காயம், இயலாமை, உடற்பயிற்சி முறைகள், நடனம், யோகா, களரி, உடற்கூறு முறைகள் இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனத்தில் பயிற்றுவிக்கப் படுகின்றன.

படிக்கும்போதே தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகள், மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் இக்கல்லூரி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், யோகா நிலையங்கள், மருத்துவ மனைகளில் அதிக வேலை வாய்ப்பு காணப்படுகிறது. சுய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

இக்கல்லூரியில் கீழ்க்கண்ட இளங்கலை/முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.

1.BSc (fitness & lifestyle modification) இளங்கலை பட்டம் – 3 ஆண்டுகள். தகுதி: +2 biology
2. Fellowship (sports medicine) முதுநிலை – 2ஆண்டுகள். தகுதி: MBBS
3. Fellowship (fitness medicine) முதுநிலை – 2ஆண்டுகள். தகுதி: MBBS
4. MSc (sports & fitness Nutrition) தகுதி: BSc course with Nutrition subjects
5. MSc (Sports & fitness Psychology) தகுதி: MBBS/BSc psychology
6. Post Graduate Diploma in Biomechanics & kinesiology in Sports and Fitness. தகுதி: MBBS/BPT
7. Post graduate diploma in Exercise Physiology in Sports and Fitness. தகுதி: MBBS/BPT

இக்கல்லூரியில் , Anatomy physiology, Nutrition & lifestyle modification போன்ற தேர்வுகளில் மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கான விழா தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழக துணைவேந்தர் திருமதி. S.கீதாலஷ்மி அவர்கள் தலைமையில், திருமதி வைஜயந்தி மாலா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திரு நடராஜன் (துணை ஆணையர் GST) சர்வதேச தடகள வீரர், அர்ஜுனா விருது பெற்ற வீராங்கனை திருமதி ரச்சனா கோயல் (நிர்வாக இயக்குனர், இந்திய விளையாட்டு ஆணையம்) ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம்,
6, வது அவென்யூ ,அண்ணா நகர்,
சென்னை-600040
போன்:9659650000