ஐடியாவின் புதிய ஐடியா, ரூ.22க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா

ரிலைன்யஸ் ஜியோ ஏற்படுத்தியுள்ள போட்டியினை சமாளிக்க மற்ற முன்னணி நிறுவனங்களை போன்றே ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் வோடபோன் அறிவித்ததை போன்றே ஐடியாவின் புதிய சலுகைகள் அமைந்துள்ளன.  ஐடியா அறிவித்துள்ள புதிய சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 3ஜி / 4ஜி டேட்டாவினை வழங்குகின்றது. ரூ.22 செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற முடியும். இதற்கான வேலிடிட்டி ஒரு மணி நேரம் ஆகும். வோடபோன் நிறுவனமும் ஒரு மணி நேர வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டங்களை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.  இது குறித்து வெளியான தகவல்களில் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஸ்கிரீன்ஷாட்டில் ஒரு மணி நேரத்திற்கு 3ஜி / 4ஜி டேட்டா பேக் விலை ரூ.14 என குறிப்பிடப்பட்டிருந்தது.  வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற திட்டங்களை வழங்கலாம் என கூறப்படுகின்றது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கியிருக்கும் சேவைகளுக்கு போட்டியளிக்கும் விதமாக இந்தியாவின் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதே ஆண்டில் டேட்டா மற்றும் மொபைல் சலுகைகளில் அதிகளவு மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.