ஹெல்மெட் போடாதவர்கள், கட்டுரை எழுதினார்கள்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் அதிகம் பேர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்த நிலையில், போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் நிறைய பேர் அபராதம் கட்ட மறுத்துள்ளனர். இதனால் போலீசார் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர். ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியவர்களுக்கு ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டுரை எழுதுமாறு போலீசார் தண்டனை அளித்துள்ளனர். இந்த வினோத தண்டனைகளுக்குப் பிறகு ஹெல்மெட் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். கட்டுரை எழுதும் தண்டனைக்குப் பிறகு அதிகம் பேர் புதிதாக ஹெல்மெட் வாங்கியுள்ளனர். அதில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களும் அடங்கியுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.