ரூ.999/- விலையில் 4ஜி போன்களை அறிமுகம் செய்கிறது, ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பீச்சர் போன் சந்தையில் 4ஜி எல்டிஇ அல்லது வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோவின் பீச்சர் போன்களில் இலவச வாய்ஸ்கால் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து வெளியான ஆய்வறிக்கையில் முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனம் வெளியிட இருக்கும் ரூ.999 மற்றும் ரூ.1500 விலை கொண்ட பீச்சர் போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் இவை மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.  வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பீச்சர் போன்கள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ஸ்மார்ட்போன் சந்தையில் மிக பெரிய போட்டியை ஏற்படுத்தும். இதன் பின் மக்கள் பீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதை தவிர்த்து பீச்சர் போன்களில் இருந்து வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்களையே அதிகம் வாங்குவர் என சைபர்மீடியா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜியோவின் வோல்ட்இ பீச்சர்போன்களில் முன்பக்கம் மற்றும் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் இவற்றுடன் ஜியோ செயலிகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஜியோவின் டிஜிட்டல் வேலெட் சேவைகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ரிலையன்ஸ் ஜியோவின் பீச்சர் போன்கள் வெளியாகும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி மாற்றியமைக்கப்படும் என சந்தை வல்லுர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு பீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவோர் எண்ணிக்கை கனிசமாக குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.