பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேதி அறிவிப்பு – அதிமுக

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி செவ்வாய் கிழமை வானகரம் ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் காலை :10:30 மணியளவில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைப் பெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவால் நிர்ணயிக்கபட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

செயற்குழு உறுப்பினர்கள் 250 பேர்களும், பொதுக்குழு உறுப்பினர்கள் 2780 பேர் உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது