பயீர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரி விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டில்களுடன் காத்திருப்பு போராட்டம்

2015 -2016, 2016-2017 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்ட பின்பு இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படமால் இருப்பதை கண்டித்தும், உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க கோரியும், அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டபின்பு அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி  கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பூச்சி மருந்து பாட்டில்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசுவாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தினை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்தியிருப்புபோராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், போராட்டத்தினை காவல்துறையினர் தடுக்க முயன்றால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொள்ளபோவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.