‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் காதல் மெலடி ‘வானே வானே’ வெளியானது

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார். துல்கர் சல்மானின் 41வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் தொடங்கும் பாடல், துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இடையேயான காதல் தருணங்களையும், அவர்களின் அழகான பயணத்தையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்துகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடலை நகுல் அபயங்கர் பாடியுள்ளார். கே.ஆர். தரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ராம் மாஸ்டர் நடன அமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலின் முக்கிய சிறப்பம்சமாக துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் இயல்பான கெமிஸ்ட்ரி அமைந்துள்ளது.

அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்ய, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது.