துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. “Love Will Spark Again” என்ற டேக்லைனுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரவி நேலகுதிடி இயக்கும் இப்படத்தை SLV Cinemas நிறுவனம் தயாரிக்கிறது. காதல், நகைச்சுவை, உணர்வுகள் கலந்த முழுமையான காதல் பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் துல்கர் சல்மானும், பூஜா ஹெக்டேயும் இயல்பாக உரையாடும் காட்சி இடம் பெற்றுள்ளதால், அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.