கதாநாயகி ஆத்மியாவை பாராட்டும் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் “நண்டு என் நண்பன்” படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மியாவை ஒப்பந்தம் செய்தனர். படபிடிப்பில் அவருடைய ஒத்துழைப்பு குறித்து குழுவினர் மட்டுமல்ல இயக்குனருக்கும் மகிழ்ச்சி.

ஆத்மியாவை பற்றி இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறியதாவது.

மனம் கொத்திபறவை படத்தில் நடித்த ஆத்மியாவை ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்தோம். டிரஸ், ஹோட்டல், கார், உணவு, எல்லாமே கம்பெனி கொடுத்ததை ஏற்றுக்கொண்டு படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வந்து முழு ஒத்துழைப்பு தந்த நடிகை ஆத்மியா இன்றைய சினிமாவிற்கு இவரை போன்ற நடிகைகள் இருந்தால் தயாரிப்பாளருக்கு பேருதவியாக இருக்கும்” என்கிறார்.

ஜித்தன் ரமேஷ், ஆத்மியா, முருகதாஸ், சந்தானபாரதி, அனுமோகன், சாந்தினி ஆகியோரும் நடித்து வரும் இந்த படம் துரிதமாக வளர்ந்து வருகிறது.