‘தோனியை மறக்கவே முடியாது’ – ராய் லட்சுமி

தோனி, சென்னை என்றாலே பலருக்கும் நினைவிலே வரும் இன்னொரு பெயர் ராய் லட்சுமி (லட்சுமி ராய்). அவர்கள் நட்பு அந்த அளவுக்கு பாப்புலர். இந்த நிலையில் ‘ஜூலி 2’ பட புரொமோஷனில் தோனி பற்றி மீண்டும் கருத்து தெரிவித்து இருக்கிறார் ராய் லட்சுமி.

அது குறித்து கூறும்போது “தோனியுடனான என்னுடைய உறவானது மறக்க முடியாதது. அது என்றும் மாறாதது. அப்போது நிகழ்ந்ததையெல்லாம் மக்கள் நினைவிலே வைத்துக்கொண்டு எங்களைப்பற்றி இன்னும் பேசுவதெல்லாம் எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தோனியின் கடந்த காலம்குறித்துப் பேசும் போது, அதிலே நானும் வந்து விடுகிறேன். வருகின்ற காலத்தில் ஒருநாள் இதைப் பற்றியெல்லாம் தொலைகாட்சியில் ஒளிபரப்பானால், என்னுடைய குழந்தைகள் இதனைப்பற்றி எனனிடம் கேட்கப் போகின்றார்கள்” என்று சிரித்தார்.