495 கோடி பிரிக்ஸ் வளர்ச்சிக்காக சீனா ஒதுக்கீடு

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக சீனா 495 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று சீனாவின் ஷியாமென் நகரில் தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று காலை பேசினார்.

பின்னர் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக இந்திய மதிப்பில் 495 கோடி ரூபாய்(76 மில்லியன் டாலர்) ஒதுக்குவதாக மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிதியின் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்தப்படும் என கூறினார்.  மேலும் 2.6 கோடி (4 மில்லியன் டாலர்) தேசிய வளர்ச்சி வங்கிக்காக ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.