இளநிலை மருத்துவப் மாணவர்களுக்காக விடுதிக் கட்டடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

Singer RUkkumani Ashok Kumar wishes and Thanks all Cine fans

சென்னை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, தற்போதுள்ள ஆண்கள் விடுதி 1959ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இம்மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களின் சேர்க்கை 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும், மருத்துவ இளநிலை பட்டம், பல் மருத்துவம், மருந்தாக்கியல் போன்ற பல்வேறு படிப்புகளில் சுமார் 450 மாணவர்கள் புதியதாக சேருகின்றனர்.

இவர்களுக்கு, தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனை உணர்ந்து மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட பழைய மத்திய சிறைச்சாலை வளாகத்தில், ஆண்கள் விடுதி கட்ட 28 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கு நிதி ஒப்புதல் வழங்கினார்கள்.

முதலமைச்சர் இன்று திறந்து வைக்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான விடுதிக் கட்டடமானது 1,28,076 சதுர அடி கட்டட பரப்பளவில் தரைத்தளத்துடன் கூடிய ஆறு மேல்தளங்கள் கொண்ட கட்டடமாகும். இந்த விடுதியானது 178 அறைகளுடன் 534 மாணவர்கள் தங்கி படிக்கும் வசதி கொண்டது. இந்த விடுதிக் கட்டடம், மின்தூக்கி, நவீன சமையலறை, உடற்பயிற்சி அறை, பல்நோக்கு அரங்கம், குடிநீர் சுத்திகரிப்பு கருவி, சூரிய மின்சக்தி மூலம் தண்ணீர் சூடுபடுத்தும் கருவி போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இக்கட்டடம் அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திருமதி பா. வளர்மதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு, அரசு உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.