திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், பீரங்கி பயிற்சியாளராக பணியாற்றிவருபவர் சக்திவேல், வயது 37. 20 வருடங்களாக ராணுவத்தில் சேவை செய்யும் சக்திவேல், தேனி மாவட்டம், கடைமலைப்புதூரைச் சேர்ந்தவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் 5 வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.
இவர் வழக்கம் போல் நேற்று ராணுவ வீரர்களுக்கு, பீரங்கியை இயக்குவது குறித்து வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார். . அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கி சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறியுள்ளது. அதை உணர்ந்த அவர் வெளியேற முயன்றபோது பீரங்கியின் அவசர கால கதவு திறக்கவில்லை. இதையடுத்து மூச்சுத் திணறி சக்திவேல் உயிரிழந்தார்.