பதவி வெறியின் காரணமாக சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை – டி.டி.வி.தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பதவி வெறியின் காரணமாக சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலமைச்சராகிய சசிகலாவையே பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் நபர் எப்படி நல்லவராக இருக்க முடியும். எடப்பாடி பழனிசாமி தாமாகவே பதவி விலகவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எடப்பாடி பழனிசாமி பதவி விலகநேரம் கொடுத்துள்ளோம்.

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதவி விலகினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். அதிமுக பொதுக்குழுவை கூட்ட எனக்கு மட்டுமே தற்போது அதிகாரம் உள்ளது. மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தவறான தகவல்களை கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி சரியில்லாத போது பா.ஜ.கவினர் உள்ளிட்ட மற்றவர்களை எப்படி குற்றம்சட்டமுடியும்? என்று கேள்வி கேட்ட தினகரன்

மேலும் கூறுகையில், பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தாலும் பொதுச்செயலாளர் சசிகலா தான். நாங்கள் உருவாக்கிய அரசுக்கு எந்த கேடும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆளுநரின் கூறியுள்ளது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.