இன்று நியூசிலாந்தில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

 

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் இன்று  6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆக்லாந்து தீவில் இருந்து சுமார் 196 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.