தனுஷ்கோடியாபுரம் தெருவைச்சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் முருகன்(46). இவர் இளையரசனேந்தல் சாலையில் பர்னிசேர் கடை நடத்தி வருகின்றனார். மேலும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு எதிரே முருகனுக்கு சொந்தமான பர்னிசேர் குடோன் உள்ளது. இதற்கு அருகில் செக்கடித்தெருவைச் சேர்ந்த சீனிவாசகம் என்பவரது மகன் சுரேஸ் பாண்டியன்(31) என்பவருக்கு சொந்தமான பழைய அட்டை குடோன் உள்ளது. இன்று அதிகாலையில் தீடீரென பழைய அட்டை குடோனில் தீ பிடித்து மளமளவென எரிந்துள்ளது. பழைய அட்டை குடோனில் பிடித்த தீ அருகில்இருந்த பர்னிசேர் குடோனுக்கும் பரவியது.
இரண்டு குடோனிலும் தீ பிடித்து எரிவதை கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், மேற்கு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீரலெட்சுமணப்பெருமாள் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த மற்ற பகுதிகளுக்;கு தீயை பரவ விடமால் தடுத்து நிறுத்தினர்.சிறிய போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இந்த இரண்டு குடோன்களுக்கு அருகில் தீப்பெட்டி மூலப்பொருளான குளோரைட் குடோன் மற்றும் தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. தக்க சமயத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பர்னிசேர் பொருள்கள் மற்றும் பழைய அட்டைகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.