கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு பூவனநாத சுவாமி – செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடிப்பூர வளைகாப்பு விழா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சுவாமி, அம்பாளுக்கு 18வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த 11 வகையான சீர்வரிசை வளையல்களை கொண்டு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல்கள், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. இதேப்போன்று வீரவாஞ்சி நகர் சங்கரலிங்கசுவாமி –சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலும் ஆடிப்பூரவளைகாப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.பூஜைகளை சுப்பிரமணி ஐயர் செய்தார்.விழாவில் கோவில் தலைவர் ராஜாபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாகி கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு வளையால், மஞ்சள்கயிறு பிரசதமாக வழங்கப்பட்டது.