பிரைம் வீடியோவின் பிரபல தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின் இரண்டாவது சீசன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட க்ரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லர் தொடரை புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பில் வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்தத் தொடரில், காவல் அதிகாரி SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுவதிலிருந்து தொடங்கும் விசாரணை, ‘மணி’ என்ற மர்மமான நபரைச் சுற்றி பல அதிர்ச்சிகரமான ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது. குற்றம், ரகசியங்கள், வதந்திகள் மற்றும் உண்மையைத் தேடும் புலனாய்வு என விறுவிறுப்பான திரில்லராக இந்த சீசன் உருவாகியுள்ளது.
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடனும், பல்வேறு மொழிகளில் சப்டைட்டில்களுடனும் இந்தத் தொடர் வெளியாகிறது.


