துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் ஃபேன்டஸி திரில்லர் திரைப்படமான ‘ஐ ஆம் கேம்’ (I Am Game) படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், ஃபேன்டஸி அம்சங்கள் மற்றும் துல்கர் சல்மானின் வித்தியாசமான மாஸ் தோற்றம் என டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமான ‘ஐ ஆம் கேம்’, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


