இதயம் முரளி’ முன் வெளியீட்டு விழா: “ஆகாஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்” – அட்லீ பாராட்டு

Dawn Pictures தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுதி, இயக்கி தயாரித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம், அதர்வா முரளி நடிப்பில் ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது.

படத்தின் முன் வெளியீட்டு விழா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அட்லீ, “ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். ‘இதயம் முரளி’ அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும். அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் இது இருக்கும்” என்று பாராட்டினார்.

நடிகர் அதர்வா, இளம் படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய காதல், நட்பு, உணர்வுகள் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளதாகக் கூறினார்.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், காதலைக் கொண்டாடும் அழகான திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியிருப்பதாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நிகழ்வில் பேசிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் அனைவரும் படத்தின் காட்சியமைப்பு, இசை, நட்பு, காதல் மற்றும் உணர்வுகளைப் பாராட்டியதுடன், படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.

தமன் எஸ் இசையமைத்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் காதல், நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நிலையில், ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.