80 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய திரைத்துறை பாரம்பரியத்தை கொண்ட ஏவிஎம் நிறுவனம், 179 திரைப்படங்கள் மற்றும் 55 தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்திய சினிமாவில் பல முன்னோடி தொழில்நுட்பங்களையும் வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளையும் அறிமுகப்படுத்திய பெருமை ஏவிஎமுக்கு சொந்தமானது.
சினிமா பாரம்பரியத்தை போற்றும் வகையில் 2023ஆம் ஆண்டு ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரம்மாண்ட வசதிகளுடன் ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெருநிறுவன மாநாடுகள், பொருட்காட்சிகள், திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், திருமணம், நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வகையில் நவீன வசதிகள், விசாலமான பார்க்கிங், பிரம்மாண்ட மேடை மற்றும் சைவ–அசைவ சமையலுக்கான தனித்தனி அடுப்பறைகளுடன் இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

