நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில், மமீதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் ஆறு முன்னாள் உதவி இயக்குநர்கள் இணைந்து தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த வுமன் சென்ட்ரிக் திரைப்படத்தின் அறிமுக காணொளி, அதன் கான்செப்ட் மற்றும் பின்னணி இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

