ராஜூ ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’ பூஜையுடன் தொடக்கம்!

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் இன்று (ஜூலை 6) பூஜையுடன் தொடங்கியது. நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

டார்க் காமெடி, குடும்ப பொழுதுபோக்கு மற்றும் கிராமத்து மண்வாசனை கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, தாமரை செல்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பூஜை விழாவில் ஆர்.ஜே. பாலாஜி, லலித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஹெச். வினோத், புதிய கதைக்களத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் தரமான குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகி வருவதாக தெரிவித்தனர். வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.