அர்ஜுன் தாஸ் ‘சூப்பர் ஹீரோ’… ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களத்தை சுட்டிக்காட்டும் மேலும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும், தேஜு அஷ்வினி நாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லனாக சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகி வருகிறது.