‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி; வைரலாகும் விஷ்ணு விஷால் நட்பு தருணம்

ஜூலை 3 அன்று வெளியான “கட்டா குஸ்தி 2” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மதுரை பயணத்தின் போது, நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் படக்குழுவினர் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவையும் தொடர்புகொண்டு, “ஊரே படத்தைக் கொண்டாடுகிறது. படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பாராட்டினார்.

நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷால் – சூரி பகிர்ந்த இந்த அன்பான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.