திமுக வெளிநடப்பு

சரவணன் எம்.எல்,ஏ., பேசியதாக வெளிவந்த வீடியோ விவகாரம் குறித்து திமுக சார்பின் இன்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பேரவையில் வலியுறுத்தப்பட்டது. பேரவை தலைவர் அனுமதி தர மறுத்ததால் திமுக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல். கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பின் போது வெளியே வந்த ஸ்டாலின் பேசுகையில், நேரமில்லா நேரத்தில் வீடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினோம். பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும், தீர்ப்பு, நீதிமன்ற செயல்பாடு குறித்து பேசக்கூடாது என்று தான் விதி உள்ளது. ஆனால் இந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை அப்படி இருக்க விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்

மேலும் அவர், சம்மந்தப்பட்ட எம்.எல்,ஏ., சவரணன் இது குறித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை, இது குறித்து பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வீடியோ விவகாரம் குறித்து வலியுறுத்த ஆளுநரை சந்திக்க திமுக தரப்பில் நேரம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.