காவிரி வழக்குகள் அனைத்தும் இறுதிக்கட்ட விசாரணைகள் முடிந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி சட்ட நடவடிக்கைகள் 4 வாரத்திற்க்குள் துவக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு இறுதி தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க வேண்டுமானால் குறைந்தது 100 டிஎம்சி தேவை உள்ளது.எனவே செப்டம்பர் மாதம் வரையிலாவது 63 டிஎம்சி தண்ணீரையாவது பெற்றுத் கொடுத்தால் தான் பயிர்களை பாதுகாக்க முடியும். நிலைமை இவ்வாறு இருக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை ஏற்க மறுத்து நிராகறித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் காவிரி பிரச்சினையில் ஜெயலலிதா பெற்றுக் கொடுத்த சட்ட உரிமைகள் சுயநலத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி அரசு பறி கொடுத்து விடுமோ என்கிற சந்தேகம் வருகிறது. தன் ஆட்சிக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவ்வபோது பிரதமர் மோடியை வைத்து மணிகணக்கில் பஞ்சாயத்து பேச முடிகிறது. ஆனால் காவிரி குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பதும், எடப்பாடி பழனிச்சாமி கேட்க மறுப்பதின் மர்மம் என்ன?
கர்நாடகாவில் அரசியல் லாபத்திற்க்காக மோடியும்,சுயநலத்திற்க்காக எடப்பாடி பழனிச்சாமியும் காவிரி பாசனப் பகுதி இவ்வாண்டும் அழிவதற்க்கு கர்நாடகாவின் நயவஞ்சக செயலுக்கு துணை போய்விடாதீர்கள். தமிழகத்தின் நெருக்கடியை உணர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடன் கூட்டி தீர்வு காண முன் வரவேண்டும்.
காவிரி டெல்டாவை இவ்வண்டாவது அழிவிலிருந்து மீட்க உடன் 63டிஎம்சி தண்ணீரை பெற்றுக் கொடுக்க பிரதமர் மோடி அவர்களை முதல்வர் பழனிச்சாமி சந்தித்து வலியுறுத்தி உடனடி அவசரக்கால நடவடிக்கையாக தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டுகிறேன். தற்போது தண்ணிரின்றி ஆங்காங்கு சாகுபடி பயிர்கள் காய தொடங்கியுள்ளது. எனவே மேட்டூரிலிருந்து விடுவிக்கப்படும் தண்ணீரை 15000 ம் கன அடியாக உடன் உயர்த்திட வேண்டும் என்றார்.
உடன் தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.