அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பினாகபாணி பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தனது பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், பினாகபாணியின் பணிநீக்கத்தை ரத்து செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நீதிபதி கூறுகையில், ” மாணவர்களுக்கு கல்வி தருவது அடிப்படை உரிமை என்றாலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். நாட்டின் சொத்துக்களாக கருதப்படும் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அனைத்து பள்ளிகளிலும்  குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.