காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராம பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் இவரது மகன் காமேஷ் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காமேஷ் என்ற மாணவனை பள்ளி ஆசிரியர், பெற்றோர்கள் பள்ளி பாடங்களை படிக்கவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த மாணவன் வீட்டின் மாடியில் சென்று உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். 52 சதவீத தீ காயத்துடன் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி. மேல் சிகிச்சைக்காக சென்னை அனுப்பப்பட்டனர். இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.